Thursday, April 13, 2006

சைக்கிள்

"என்ன தம்பி, மொழங்கால் பொடனில அடிக்க ஓடியார?"
"மணி என்னங்க?"
"7.02"
"........................"
"இருட்டிருச்சு, ஜாக்ரதயாப் போ!"
"..........................................."
"அட நாய் கீய் தொரத்தப்போகுது!!"

************
"5.30க்கு வந்துடு, கோயிலுக்குப் போகனும். இன்னைக்குப் பிரதோஷம்"
"சரிம்மா"
"விளயாட்டு மும்முரத்துல மறந்த.........................."
"சரிம்மா"
"இன்னைக்கு ஒரு நாள் கிரிக்கெட் விளையாட போகலேனாத்தான் என்ன?"
"சரிம்மா! சீ.....போயிட்டு டயத்துக்கு வந்துடரேன்"
"என்னம்மோ பன்னு"

************
"என்னடா லேட்டு? கால்ல என்ன ரத்தம்?"
"பாட்டி, வாசல்லியே வெச்சு ஒன்னும் கேக்காத. நான் சைடால போய், பின்பக்கமா பாத்ரூமுக்குள்ள போயிடரேன். நீ கொல்ல கதவ தொரந்துவுடு...........பிளீஸ்"
"சரி வந்தேன்........... நீ போ"
"என் மானம் காத்த மங்கையே நீ வாழ்க! உன் குலம் வாழ்க!"
"சீக் கழுதை!"

************
"டேய், நான் கிளம்பரேண்டா. டயமாச்சு"
"இருடா. இன்னும் ஒரு மாட்ச் ஆடிட்டுப் போகலாம். நானும் கிளம்பனும்"
"இல்லடா, மணி இப்பவே 5.20. வீட்ல சீக்கிரம் வர்ரதா சொல்லிருக்கேன்"
"அட! எல்லாம் போய்க்கலாம்டா"
"இன்னொரு மாட்சுக்கு டையமிருக்காதுடா. ரெண்டாவதாடுர டீம் அலைஸ் பாய்ஸ்தான் ஆடனும்!"
"ஒரு குட்டி மாட்ச். சிக்ஸ் ஓவர்ஸ்"
"டெம்ப்ட் பன்னாதீங்கடா"

************
"வாங்க சார்! உங்க ஊர்ல இப்ப டைம் எவ்ளோங்க?"
"குளிச்சுட்டு வர லேட்டாயிடுத்து"
"விளையாட்டு மொம்மரத்துல மரந்துராதனு சொன்னேன். கேட்டியா?"
"சரிம்மா. அதான் வந்துட்டேனே. அர்ச்சனை சாமிக்குன்னுல நினைச்சேன்!"
"இதுக்கு ஒன்னும் கொரச்சலில்ல. இன்னிக்கு சங்கடଭஹரଭசதுர்த்தியாச்சே. அம்மா சொன்னாளே. நேரத்துக்கு ஆத்துக்கு வரனும்னு இருக்கோ?"
"ஓ! இன்னைக்கு அதுவா?"

************
"என்னடா டாஸ் தோத்தியா? நான் வீட்டுக்கே போயிருப்பேன்!"
"டேய், கோச்சுகாதடா! நான் இன்னொன்னு சொன்னா, நீ.................."
"என்னடா?"
"பத்தோவர் மாட்ச்!!"
"அடப்பாவி! டேய், நான் 5.30க்கு வீட்டுக்கு வர்ரதா சொல்லிருக்கேண்டா!"
"போன மாட்ச் நம்ம ஃர்ஸ்ட்டு ஆடும்போது, பன்னெண்டோவர் ஆடினோம்மாம், அதனால இந்த மாட்சு அவங்க அட்லீச்ட் பத்தோவராவது ஆடனுமாம்!"
"போடாங்......."

************
"சரி அர்ச்சனை சாமானக் குடு"
"அது சரி! என்னமோ சொல்வாளே.............ஐயரு வரவரைக்கும் அம்மாவாசை காத்திருக்குமா?"
"எதுகை மோனம் எல்லாம் நல்லாருக்கு!"
"நீ வரக்கானுமேனுட்டு, அப்பாவ அனுப்பிட்டேன். நீ போய் பிரசாதம் தூக்கு ரெண்டையும் திரும்ப கொண்டுவா. அப்பாக்கு வேர வேல இருக்கு"
"சரி"
"சைக்கிள்ல மாட்டிண்டு வரும்போது ஜாக்ரிதை. ஒரு தூக்கோட மூடி சரிக்கிடையாது. பாத்துக்கோ"
"................"

************
"பாவி, ஆறோவர்னு சொல்லிட்டு, இப்படி பன்னிடியேடா"
"அதான், உனக்காக அன்ஞோவர்ல முடிச்சிட்டோம்ல"
"ஆமாம், அவனுக்கு பத்தோவர் போட்டுட்டு, நம்ம அன்ஞோவர்ல காலி. எனக்கு வீட்ல டின் இருக்குடி!"
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது"
"நாளைக்குப் பாக்கலாம்டா. டைம் என்னாச்சு?"
"7.00"

************
"ஐயையோ! சைக்கிள என்னடா பன்ன?"
"மத்தியானம் விளையாட போகும்போது எடுத்துண்டு போனேன். கிரெளண்டுல மரந்து வெச்சுட்டு வந்துட்டேன்"
"பூட்டினியா இல்லயா?"
"பூட்டினேன். பட் எங்கியும் விழுந்துரக் கூடாதுனு சாவிய ஸ்டம்ப் பக்கதிலேயே வெச்சேன்"
"கிடைச்சமாதிரிதான்"
"கிரெளண்டுல போய் பாக்கப்போரேன்"
"டேய், அம்மா கோயிலுக்குப் போக சொன்னாளேடா"
"இட் ஹாஸ் டு வெய்ட்"
"அந்த இருட்டு கிரெளண்டுல எப்படி தேடுவ?"
"டாம் இட்!"
"தேர் இஸ் நோ வே யூல் பைஃண்ட் இட் நெள"
"கேன் யூ பி எ லிட்டில் ஹெல்ப்ஃபுல் மைடியர் ஸினிக்கல் ஸைக்?"
"காலைல வந்து பாக்கலாம். இப்போ "நம்மளால" ஒன்னும் பன்ன முடியாது"
"எப்படி மரந்தேன்?"
"இட் ஹேப்பன்ஸ்"

************
"என்ன தம்பி, மொழங்கால் பொடனில அடிக்க ஓடியார?"

(முற்றும்)



பி.கு.: The World Health Organization (WHO) estimates that between 35,000 and 50,000 individuals worldwide die each year as a result of rabies. The highest incidence of rabies occurs in Asia, most occurring in India. Onset is delayed, usually weeks to months after the person has been bitten. Early symptoms of rabies include fever, headache, and flu-like symptoms. These progress to abnormal behavior, anxiety, disorientation, delirium, hallucinations, ..........