Tuesday, April 25, 2006

திங்கட்கிழமை


பாகம் II

(பாகம் I இங்கே)

"நீ என் வயதில் இருந்தால், அந்த நொடியில் மட்டும் வாழக் கற்றுக்கொள்வாய்!" என்றார் ஆங்கிலத்தில், என் கேள்விக்குப் பதிலளிப்பதைப்போல். திடுக்கிட்டேன்! புன்னகைப் புரிந்தவாரே காரைக் கிளப்பினேன்.

எதிர் வெயில் கண்னைக் கூசியது. காரில் மகாராஜபுரம் சந்தானம் நேற்று விட்ட இடத்தில் தொடங்கினார் -

"...........பாலெனென்றுத் தாவியனைத்தேன், அனைத்த என்னை
மாலையிட்டவன்போல் வாயில் முத்தமிட்டாண்டி!
பாலனல்லடி உன் மகன், ஜாலமிகச்செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச்சொல்ல நானமிகவாகுதடி!!"

- என்று "தாயே யசோதா" பாடினார் ம.ச. "பால"க்கிருஷ்ணன் மீது சினம்கொண்ட கோபியர் பாடும் பாடல். இதற்குமுன் இந்த வரிகளை நான் கவணித்ததில்லை. இது என்னமாதிரி பக்திப்பாடல்? இல்லை இது "பரவசப்" பாடலா? நான் எழுப்பியக் கேள்வியில் நானே முகம் சுளித்தேன். இருப்பினும், எழுப்பிய விதத்தில் இல்லையென்றாலும் கேள்வியில் அர்த்தமிருப்பதாகவே நினைக்கிரேன். "ஊத்துக்காடாரின்" பக்தி என்னைக் குழப்புகிறது. இப்பாடலை பிஃராய்ட் கேட்டால் என்ன சொல்வார்? மனித இயல்புகளை காமம்/வன்மம் என்று இரு தரத்தினில் சேர்த்துவிட்டார் அவர். இதை என்னவென்றுச் சொல்வார்?

"பார்க்கிங் லாட்டில்" காரை நிருத்திவிட்டு நடந்தேன். வாயிற்கதவில் அடையாள அட்டையை கான்பித்து அலுவலகமுள்ளே நுழைந்தேன். என் "கியுபிற்குச்" சென்று லேப்டாப்பை இயக்கி வேலையை தொடங்க இருந்தேன். திங்கட்கிழமை காலைகள் எப்போதுமே மெதுவாகத்தான் செல்லும். காலை வேளை அமைதியாக இருக்கும். ஆனால் இன்று ஒரு பேச்சுக் குரல் கேட்டது. தமிழ் கலந்த ஆங்கிலத்தில். உரையாடல் "ஒன்- சைடாக" இருந்தது. தொலைப்பேசியாக இருக்கவேண்டும். குரல் பரிச்சியமானக் குரல். என் கியூபின் பின்னால், நான்கு கியூபுகள் தள்ளி தமிழ் பேசும் பெண்ணொருத்தி இருக்கிராள். மாநிரம். சதுர முகம். அகண்டக் கண்கள். வெற்று நெத்தி. அவசரக் கொண்டை. காதில் "ஸ்டட்". காலில் சதா ஒரு ஓட்டம். தலையனை உரை போன்ற ஆடை. எப்போதும் ஒரு தொலைதூரப் பார்வை. குரல் அவளுடையதுதான் -

"ஐ கெனாட் ஹெல்பிட் கண்ணா! ஐ வில் டூ திங்க்ஸ் அட்மை ஓன் பேஸ்"
"................."
"டெல் மி ஒன் இன்ஸ்டன்ஸ் வேர் ஐ டிட்ண்ட் டூ வாட் யு ஆஸ்க்ட்?"
".............."
"கண்ணா, திஸ் இஸ் நாட் பேஃர்"

என் திங்களுக்கு மங்களகரமான தொடக்கம். வாரக் கடைசி முழுதும் ஒன்றாக இருந்துவிட்டு, திங்கட்கிழமைக் காலை, அதுவும் ஆபீஸ் வந்து தொலைப்பேசியில் எதற்காக இந்த "டொமஸ்டிக் டிஸ்டர்பன்ஸ்"?! ஒரு வேளை வாரக் கடைசியின் தொடர்ச்சியோ? அப்படித்தான் இருக்கவேண்டும். அதுவும் ஆங்கிலத்தில்.

"நான் உங்கள இப்படி இருங்கோ அப்படி இருங்கோன்னு சொல்லலியே"
"..........................."
"சாயந்திரம் செத்த நேரம் டீவி பாத்தது தப்பா?"
"....................."
"ஆமாம், நான் அப்படித்தான். இன்னியலேந்து உங்க துனிய நான் மடிக்க மாட்டேன்.......தோய்க்கவும் மாட்டேன்"

அட! இப்போது சுத்த தமிழில். அப்படி என்னத்தான் பிரச்சனையோ? சாயந்திரம்வரை காத்திருக்க முடியாதளவிற்கு, இது என்ன காதலா? "கத்திரிக்காய்"தானே! அவர்கள் போடும் சண்டைக்கு நான் ஏன் சங்கடப்படுகிறேன்? "சண்டைகளைவிட சமாதானங்கள்தான் அருவருப்பானவை" என்று ஜெ.கே எழுதியது நினைவிற்கு வந்தது. என்னத்தைச் சொல்லியும் பிரயோஜனமில்லை என்கிறவாரு கண்களை உருட்டி, தோளைக் குலுக்கி வேலையில் இரங்கினேன்.

" 'morning my friend!"

"hey what up!", என் கொலிக் நண்பன். சீனாக்காரன். இல்லை டைவான்காரன். சீனா என்றால் உதைப்பான். சீனர்களுக்கே உள்ள முகத்தோற்றம் - சப்பை மூக்கு, இடுங்கிய கண்கள், ஒரு மாதிரியான மஞ்சள் நிரம், தேங்காய் நாரைப்போல் தலைமுடி, கருப்பேரிய பற்கள். பெற்றோர்கள் இவன் எட்டு வயதிருக்கும்போது புலம்பெயர்ந்துவிட்டார்கள். ஆகையால் இவன் ஆங்கிலம் "மாஸ்டர்! டீச் மி குங்புஃ" போன்றதில்லை, "டியூட்" ஆங்கிலம்.

"how was your weekend?"
"the usual"
"what did you do?"
"saw some movies, went pub hopping.....same old......and yours?"
" 'was in newyork with my girl friend. had some "fun"........ 't was great!"
"cool"
"listen..........i've gotta question for you. hope you don't take it the wrong way"
"you even have such discretions?"
"as a matter of fact i do, but not with you"
"geee! for what crime am i punished for?"
"thats the price you pay for my friendship"
"seems very expensive"
" 'neway, i bumped into one of my college friends.......this indian guy.......in newyork at a club. we were doin' some catchin' up. we're meetin' after nearly 2 years. i didn't know him very well while in college."
"is there a question somewhere in the near future?"
"i'm comin' to it. he said that most of the indian guys remain virgin until marriage. is that true? i couldn't believe it"

i wish i didn't have this conversation - மனதினில் சொல்லிக்கொண்டேன்.

(தொடரும்...)