Wednesday, April 26, 2006

திங்கட்கிழமை


பாகம் III

(பாகம் I, II, இங்கே
மற்றும் இங்கே)

"i wish i didn't have this conversation"
- மனதினில் சொல்லிக்கொண்டேன். "ஆமாம்" என்றால் சங்கடம், "இல்லை" என்றால் "then what about you", அதுவும் சங்கடமே! இவனுக்கு இதை நான் எப்படிப் புரியவைப்பது? எங்கிருந்து தொடங்குவது? என் சமுதாய அமைப்பை எப்படி விளக்குவது? முதலில் இந்திய கலாச்சாரம் புரியவேண்டும், பின்பு தென்னிந்திய கலாச்சாரம் புரியவேண்டும், அதன்பின் "அர்பன்" இந்தியா புரியவேண்டும், அதன்பின் நமது சமுதாய பொருளாதார சங்கடங்களை விளக்க வேண்டும். இல்லையென்றால் "கும்சாக" எதையாவது சொல்லலாம்

"that seems to be a gross general remark. you'll find all kinda people"
"yeah, but what percentage? which is more common?"
"who determines what is common or uncommon?"
"hmmm............."
"i gotta go. see you later."

மேற்கொண்டு அவன் கேட்பதற்குமுன், என் தொலைப்பேசி ஒலித்தது. கங்கூலிக்கு விலாவில் "ஷாட் பிட்ச்" போட்டதுபோலிருந்தது. அசிங்கமாக ஆடினாலும், அவுட் ஆகவில்லை. அடுத்த ஓவர் அப்பரம் பார்த்துக்கொள்ளலாம். தொலைப்பேசியில் பாஸ். நான் செய்த "எண் அலசலில்" சில சந்தேகங்கள் இருப்பதாகவும், மதியம் நேரமிருந்தால் சற்று நிவர்த்திச் செய்யுமாருக் கேட்டுக்கொண்டார். இன்றய போக்கு சற்றும் எனக்கு நிம்மதியை தருவதாகத் தெரியவில்லை. பாஸ் நான் சொல்லும் விளகங்களை கேட்டதாக ஒரு "பிரஸிடென்ஸும்" இல்லை. இருப்பினிம், நான் சொல்லவேண்டியதை சொல்லிவிடுவேன்.

மதியம் அவர் கியூபிர்க்குச் சென்றேன். அங்கே என் இன்னொரு கொலிகுமிருந்தான். விளக்கமளிக்க முயன்று தோல்வியுற்றது அவன் முகத்தில் தெரிந்தது. "என்னிடம் எதுவும் கேட்காதே!" என்கிரவாரு உட்கார்ந்திருந்தான் அவன். "நீ என்ன சொன்னாலும் கேட்கப்போவதில்லை" என்கிறவாரு இருந்தார் பாஸ் -

"in your analysis, you're saying business travellers to a market and economic growth of that market are positively correlated" என்று "straight to the point" கேட்டார்.
"yes......."
"but in the conclusion you have missed to point out that economic growth causes business travelling"
"yes."
"why?"
"'cause, it doesn't."
"what do you mean?"
"that business travelling can be caused by other things"
"but you are saying they are positively correlated"
"i think we shouldn't confuse correlation and causality"
"what?"
"causality - cause and effect. A & B are correlated doesn't mean A causes B"
"i'm sorry, you've lost me!"
"let me give an example. suppose i do a demographic analysis on a particular area and i find a positive correlation between number of child births and marriages. this does not mean child birth is caused by marriages............child birth is caused by something else!" என்றேன், ஜோக்கடித்த பெருமிதத்துடன்
"i think we should include what i jus' said" என்றார்.

நான் செந்திலிடம் சிக்கிக்கொண்ட கெளண்டமணியைப் போல் உணர்ந்தேன். என் அருகிலிருந்த கொலிக் ஒரு "ஆறுதல்" பார்வைப் பார்த்தான். இருவரும் "ஒகே்" போட்டுவிட்டு வெளியே வந்தோம்.

"do you know the difference between an optimist and a pesimist?" என்று கேட்டான்.
"what?"
"a pesimist thinks things are worse, but an optimist thinks it could get worser!" என்று கண்ணடித்தான், என்னைத் தேற்றும் நோக்கத்துடன்.
"nice!"
"no man's land!" என்றவாரு தோளைத் தட்டினான். கியூபிர்க்குச் சென்று வேலையைத் தொடர்ந்தேன்.

நேரம் போனது தெரியவில்லை. மணி ஏழரையை தாண்டிவிட்டது. "இண்டஸ்டிரியல் ஸ்டிரெங்த்" வாக்கும் கிளீனர் சத்தம் காதைக் கிழித்தது. "ஜேனிட்டர்" கார்ப்பெட்டை, டெச்க்குகளை சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டான். லேப்டாப்பை செயலிழக்கச் செய்திவிட்டுக், கிளம்பினேன். வெளியே இருட்டி இருந்தது. வயிறு பசித்தது. இரவு சாப்பாடு "மெக்சிக்கன்" என்ற முடிவோடு "ரெஸ்டாரண்ட்" ஒன்றுக்குச் சென்றேன். "பரீட்டோ" என்ற வஸ்த்து ஒன்றை ஆர்டர் செய்தேன். சப்பாத்தியில் சில காய்கறிகள், சாதம் வெய்த்து உருட்டினார்ப்போலிருக்கும். நல்ல காரமாக இருந்தது. நமது உணவைப் போல் காரமாக இருக்கும் ஒன்று "மெக்சிக்கன்" உணவு, மற்றொன்றுத் "தாய்லாந்த்" உணவு. மூன்றுமே சூரியனை வழிபடும் நாகரிகங்களை அடிப்படையாகக் கொண்டது. திங்கள் வழிபாட்டிற்கும் காரத்திற்கும் ஏதேனும் தொடர்புண்டா என்று யாரேனும் ஆராயவேண்டும்.

வீடு வந்து சேர்ந்தேன். உள்ளே நுழையும்முன், தபால் பெட்டியை திரந்தேன். எல்லாம் "ஜங்க்" -
"கடன் தொல்லையா? உன் கடனெல்லாம் நான் அடைக்கிறேன். என்னிடம் வாங்கு!" என்றது ஒன்று,
"மதம் மாறுகிராயா?" என்றது மற்றொன்று,
"என்னை எங்கேயும் பார்த்தாயா?" என்றது எட்டுவயது சிறுமியின் புகைப்படம் ஒன்றில்,

எங்கோ பிஃல் காலின்ஸின் "It's another day in paradise" ஒலித்தது.

***************
(முற்றும்)